×

தமிழ்நாடு போன்ற அமைதியான மாநிலத்தில் போலி வீடியோக்களை பரப்பி அமைதியை சீர்குலைப்பதை ஏற்க முடியாது : உச்சநீதிமன்றம்

டெல்லி: வட இந்திய தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பிய யூடியூபர் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ததை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியதாக பீகாரில் யூடியூபர் மணீஷ் காஷ்யப் தமிழ்நாடு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தேசியகாஷ்யப் மீது தமிழ்நாட்டில் 6 வழக்குகளும், பீகாரில் 12 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. தேசிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியதற்காக அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு மணீஷ் காஷ்யப் கைது செய்யப்பட்டார்.

தன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரி யூடியூபர் மணீஷ் காஷ்யப் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,”தமிழகம் அமைதியான மாநிலம் அங்கு போலி வீடியோக்களை பரப்பி அமைதியை சீர்குலைப்பதை ஏற்க முடியாது. தேச பாதுகாப்பு பிரிவில் கீழ் உள்ள வழக்குகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை ஏன் அணுகக்கூடாது,” என்று தெரிவித்து மணீஷ் காஷ்யபின் மனுவை தள்ளுபடி செய்தது.

The post தமிழ்நாடு போன்ற அமைதியான மாநிலத்தில் போலி வீடியோக்களை பரப்பி அமைதியை சீர்குலைப்பதை ஏற்க முடியாது : உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Supreme Court ,Delhi ,Kashyap ,
× RELATED விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட...